Saturday, November 28, 2026 1:35 pm
அமெரிக்காவில் இறைவனுக்கும், இயற்கைக்கும், நன்றி தெரிவிக்கும், ‘தேங்க்ஸ் கிவிங்’ விடுமுறைக் கொண்டாட்டங்கள் களைகட்டவிருந்த நிலையில், ‘நார்-ஈஸ்டர்’ புயல் மத்திய , கிழக்கு ஆகிய மாகாணங்களைப் புரட்டிப் போட்டுள்ளது.
அமெரிக்காவில் பென்சில்வேனியா, மேரிலாந்து,வர்ஜீனியா உள்ளிட்ட மாகாணங்களை, ‘நார்-ஈஸ்டர்’ புயல் கடுமையாக தாக்கியுள்ளது. பல இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்து மின்கம்பங்கள் ,வீடுகள் ஆகியவற்றின் மீது விழுந்தன. இதனால் 9 லட்சத்திற்கும் மேற்பட்ட வீடுகள் ,நிறுவனங்கள் ஆகியவன இருளில் மூழ்கின.
பலத்த காற்று .கனமழையால் நாடு முழுதும் 400 விமானங்கள் ரத்து செய்யப்பட்டதுடன், 2,000க்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதமாகின. பல முக்கியப் பாலங்கள் மூடப்பட்டதோடு, சாலைப் பயணங்களைத் தவிர்க்குமாறும் மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
பாதுகாப்பு கருதி, நியூயார்க் நகரின் மன்ஹாட்டன் வீதிகளில் பிரபல கார்ட்டூன் கதாபாத்திரங்கள், ராட்சத பலுான்கள், இசை கலைஞர்கள் என லட்சக்கணக்கானோர் பங்கேற்கும் பிரமாண்ட, ‘மேசிஸ்’ பேரணியும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த பேரணி 100 ஆண்டுகளில், வானிலை காரணமாக ரத்து செய்யப்படுவது இதுவே முதல்முறை.

