Sunday, November 1, 2026 5:33 pm
மகளிர் பிரீமியர் லீக் ஏலத்தில் 15 வயதான உமா காஷ்வி என்ற கர்நாடகாவைச் சேர்ந்த ஆல்-ரவுண்டர் புதிய வரலாறு படைத்துள்ளார். டெல்லி கேபிடல்ஸ் அணி இவரை 10 இலட்சம் ரூபாவுக்கு ஏலத்தில் எடுத்துள்ளது. இதன் மூலம் மகளிர் பிரீமியர் லீக் தொடரின் வரலாற்றிலேயே ஒப்பந்தம் செய்யப்பட்ட மிக குறைந்த வயது வீராங்கனை என்ற சாதனையை இவர் படைத்துள்ளார். 2011 ஏப்ரல் 9 ஆம் திகதி பிறந்தார் காஷ்வி கண்டிக்குப்பா இளம் திறமையாளர்களைக் கண்டறிந்து வாய்ப்பளிப்பதில் பெயர் பெற்ற டெல்லி கேபிடல்ஸ் அணி இவரை ஏலத்தில் எடுத்துள்ளது. இதற்கு முன்பு ஹரியானாவைச் சேர்ந்த தீயா யாதவ் தனது 16வது வயதில் டெல்லி அணியால் தேர்வு செய்யப்பட்டதே சாதனையாக இருந்தது. தற்போது அந்த சாதனையை காஷ்வி முறியடித்துள்ளார். வலதுகை பேட்ஸ்மேனாகவும், ஆஃப்-ஸ்பின் பந்துவீச்சாளராகவும் செயல்படும் காஷ்வி, பிசிசிஐ நடத்திய 15 வயதுக்குட்பட்டோருக்கான மகளிர் ஒருநாள் தொடரில் 172 சராசரியுடன் 516 ஓட்டங்கள் குவித்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். இதில் 3 சதங்களும் ஒரு அரைசதமும் அடங்கும்.
கர்நாடக மாநில அளவில் இதுவரை 530 போட்டிகளில் விளையாடியுள்ள காஷ்வி, 13,000-க்கும் அதிகமான ஓட்டங்களைக் குவித்து 24 சதங்களையும் 68 அரைசதங்களையும் விளாசியுள்ளார். கர்நாடக 15 வயதுக்குட்பட்டோர் அணியின் கப்டனாகவும், மகாராணி கோப்பை தொடரில் பெங்களூரு பிளாஸ்டர்ஸ் அணியின் கப்டனாகவும் அவர் செயல்பட்டுள்ளார்.
19 வயதுக்குட்பட்டோருக்கான ரி20 கோப்பையை வென்ற கர்நாடக அணியிலும் அவர் முக்கிய பங்கு வகித்துள்ளார்.

