Sunday, November 1, 2026 5:44 pm
ஆண்டுதோறும் நடைபெறும் மாஸ்டர்ஸ் உலக அணிகள் சம்பியன்ஷிப் போட்டிகளில், 30 வயதுக்கு மேற்பட்ட ஆண்களுக்கான ,பெண்களுக்கான அணிகள் பிரிவுப் போட்டிகள், முறையே இந்திய டென்னிஸ் ஜாம்பவான் லியாண்டர் பயஸ், முன்னாள் செக் வீராங்கனை மேரி பின்டெரோவா ஆகியோரின் பெயர்களில் அழைக்கப்படும் என உலக டென்னிஸ் அமைப்பு அறிவித்துள்ளது.
ஆண்களுக்கான போட்டி, லியாண்டர் பயஸ் கிண்ணம் என்றும், பெண்களுக்கான போட்டி, மேரி பின்டெரோவா கிண்ணம் என்றும் அழைக்கப்படும்.
புதிதாகப் பெயரிடப்பட்ட இந்தப் போட்டிகள், ஜப்பானின் டோக்கியோவில் நவம்பர் 15 முதல் 20 ஆம் திகதி வரை நடைபெறும் .
மாஸ்டர்ஸ் டூரில் உள்ள வேறு பல குழுப் போட்டிகள் ஏற்கனவே புகழ்பெற்ற டென்னிஸ் வீரர்களின் பெயர்களைத் தாங்கி வருகின்றன.

