Sunday, September 20, 2026 12:37 pm
பீஜிங்கில் செப்டம்பர் 28 ஆம் திகதி முதல் ஒக்டோபர் 6 ஆம் திகதி வரை நடைபெறவிருக்கும் ஏடிபி 500 தொடரான சைனா ஓபனில் பங்கேற்பதை நோவக் ஜோகோவிச் புதன்கிழமை உறுதிப்படுத்தினார்.
39 வயதான நோவாக் ஜோகோவிச் 11 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த நிகழ்வில் மீண்டும் பங்கேற்கிறார். உலகத் தரவரிசையில் முதலிடத்தில் உள்ள ஜானிக் சின்னர் , புதிதாக யுஎஸ் ஓபன் சம்பியன் பட்டம் வென்ற அலெக்சாண்டர் ஸ்வெரேவ் ஆகியோரும் சீனா ஓபனில் இடம்பெறுகின்றனர்.
“டென்னிஸ் உலகில் உள்ள மிகச் சிறந்த மைதானங்களில் ஒன்றான தேசிய டென்னிஸ் மையத்திற்குத் திரும்பி வந்து, உங்கள் அனைவரின் முன்னிலையிலும் விளையாடுவதில் நான் மிகவும் உற்சாகமாக இருக்கிறேன். எனது விளையாட்டு வாழ்க்கை முழுவதும் நான் சில அற்புதமான நினைவுகளையும் பெரும் வெற்றிகளையும் பெற்ற இடம் இது,” என்று அவர் மேலும் கூறினார்.
அமெரிக்க ஓபன் போட்டியில் மரியானோ நவோனுக்கு எதிராக முதல் சுற்றிலேயே அதிர்ச்சித் தோல்வியுற்று வெளியேறிய ஜோகோவிச், அதிலிருந்து மீண்டு வர ஆர்வமாக இருப்பார். இந்தத் தோல்வியின் காரணமாக, அவர் கடந்த எட்டு ஆண்டுகளில் முதல் முறையாக ஏடிபி முதல் 10 இடங்கள் வரையிலான பட்டியலிலிருந்து வெளியேறினார்.

