Monday, November 9, 2026 2:46 pm
இலங்கையில் இந்த ஆண்டு 107,829 பேர் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 81 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.
கம்பஹா மாவட்டத்தில் 22,502 பேரும், கொழும்பு 20,799 பேரும், கண்டி மாவட்டத்தில் 8,803 பேரும் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நவம்பர் மாதத்தின் முதல் சில நாட்களில் மட்டும் மொத்தம் 1,577 பேர் டெங்கால் பாதிக்கப்பட்டனர்.
இதற்கிடையில், நவம்பர் 9 முதல் 14 வரை நாடு தழுவிய ரீதியில் ‘டெங்கு தடுப்பு வாரம்’ முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

