Sunday, May 31, 2026 5:17 pm
பருத்தி இறக்குமதி வரி விலக்கு அளிக்கப்பட்டதை தொடர்ந்து, மத்திய அரசிடமிருந்து தமிழகத்திற்கு மற்றுமொரு மிகப்பெரிய நிதி உதவி கிடைத்துள்ளது. ஏழை எளிய மக்களின் கிராமப்புற வீட்டு வசதிக்காக, பிரதமரின் ஊரக குடியிருப்புத் திட்டத்தின் (PMAYG) கீழ் மத்திய அரசு தற்பொழுது 10,000 கோடி ரூபாநிதியை 12 மாநிலங்களுக்கு விடுவித்துள்ளது. அதில் தமிழ்நாடும் ஒன்று.
இந்த மாபெரும் நிதி ஒதுக்கீட்டு ஆணையை மத்திய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் சிவராஜ் சிங் சௌகான் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளார். இந்த நிதியுதவியின் மூலம் தமிழ்நாடு உட்பட இந்தியாவின் 12 மாநிலங்கள் மிகப்பெரிய அளவில் பயனடைய உள்ளன. கிராமப்புறங்களில் வசிக்கும் ஏழை மக்களுக்குத் தரமான வீடுகளைக் கட்டித் தருவதற்கும், அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கும் இந்த நிதி முழுமையாகப் பயன்படுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

