Friday, June 26, 2026 9:44 pm
தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக 47 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்று மூன்றாம் இடத்திற்கு சென்று விட்டது. இதன் காரணமாக அதிமுக சட்டசபையில் எதிர்க்கட்சியாக கூட அமர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் தொடர்ந்து அதிமுக தோல்வியை சந்தித்து வருவதால் அதிருப்தியடைந்த சிவி சண்முகம், எஸ்.பி.வேலுமணி தலைமையிலான 24 எம்எல்ஏக்கள் தவெகவை ஆதரிப்பதாக அறிவித்தனர்.
அந்த எம்.எல்.ஏ-க்களில் சி.விஜயபாஸ்கரும் ஒருவர். அவர்கள் அனைவரும் தமிழக சட்டசபையில் முதல்வர் விஜய் கொண்டு வந்த நம்பிக்கை தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்தனர். ஒரு பக்கம் அந்த எம்.எல்.ஏக்களில் 4 பேர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்து விட்டனர்.
சில நாட்களுக்கு முன்பு அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தனது எம்.எல்.ஏ பதவியை இராஜினாமா செய்தார். அப்போதே அவர் விரைவில் தவெகவில் இணையவுள்ளதாக செய்திகள் வெளியானது. ஆனால் இப்போது வரை அது நடக்கவில்லை. இந்நிலையில்தான், வருகிற ஜூலை 2ம் திகதி அவர் 10 ஆயிரம் ஆதரவாளர்களுடன் தவெகவில் இணையவுள்ளதாக செய்திகள் வெளியாகியிருக்கிறது.

