Tuesday, November 17, 2026 10:39 pm
சைபர் குற்றங்களை செய்யும் ஹேக்கர்ஸ் ஒருபக்கம் பொது மக்களை ஏமாற்றி, அவர்களிடம் ஆசையை தூண்டி ஒரு லின்க்கை அனுப்பி அதன் லின்க்கை கிளிக் செய்ய வைத்து அதன் மூலம் அவர்களின் வங்கி கணக்கிலிருந்து பணத்தை எடுப்பது நடந்து வருகிறது.
மறுபக்கம் வங்கிகளையே நேரடியாக ஹேக் செய்து வங்கி கணக்குகளில் இருந்தும் பணத்தை திருடுவது தற்போது துவங்கியிருக்கிறது. சில நாட்களுக்கு முன்பு கூட தமிழ்நாடு அரசு வங்கி கணக்குகளில் இருந்து ரூ.22.10 கோடி திருட்டு போனது. அந்த ரூ.22 கோடியும் ஊராட்சி ஒன்றியத்திற்கு சொந்தமானது. இதில் நைஜீரிய கும்பலுக்கு தொடர்பிருக்கலாம் என பொலிஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

