Monday, October 19, 2026 9:07 am
ஹிந்தி நடிகர் டைகர் ஷெராஃப்பின் வாகனத்தின் மீது மும்பையில் உள்ள ஜூஹு பகுதியில் அடையாளம் தெரியாத துப்பாக்கிதாரிகள்நேற்றும் நீயிற்றுக்கிழமை[17] நடத்திய துப்பாக்கிச் சூட்டுத் தாக்குதலில் இருந்து மயிரிழையில் தப்பித்தார்.
உதைப்ந்தாட்டம் விளையாடி முடித்துவிட்டு அந்த இடத்திலிருந்து புறப்படத் தயாராகிக் கொண்டிருந்த சிறிது நேரத்திலேயே, புஷ்பா பூங்காவிற்கு அருகில் இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.
அருகில் ரசிகர்கள் கூட்டம் கூடியிருந்தபோது, அடையாளம் தெரியாத மூன்று நபர்கள் ஷெராஃபின் வாகனத்தின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாகக் கூறப்படுகிறது.
அவரது கையில் காயம் ஏற்பட்டுள்ளது.துப்பாக்கிச் சூட்டின்போது அவரது சாரதியும், மற்றும் ஒரு ஆட்டோ சாரதியும் காயமடைந்தனர்.
லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் இந்தத் துப்பாக்கிச் சூட்டிற்குப் பொறுப்பேற்றுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.

