Friday, April 17, 2026 1:18 pm
தமிழக சட்டசபைத் தேர்தல் பிரசாரம் சூடு பிடித்துள்ளது. நடிகரை பிடித்திருந்தால் விசில் அடிக்கலாமே தவிர நாட்டை கொடுக்க முடியாது என நடிகர் பிரகாஷ்ராஜ் பேசியிருக்கிறார்..
பழனியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ் கட்சி வேட்பாளரை ஆதரித்து நடந்த கலை குழுக்கூட்டத்தில் பிரகாஷ்ராஜ் கலந்துகொண்டார்.
அந்த கூட்டத்தில் பேசிய அவர் ‘தற்போது தேர்தல் களத்தில் திராவிட மாடல், அடிமை மாடல், சினிமா மாடல் என மூன்று மாடல்களுக்கு இடையே போட்டி நிலவுகிறது. இதில், திராவிட மாடல் கல்வியை கொடுத்திருக்கிறது. பல திட்டங்களில் இந்தியாவுக்கே முன்னோடி மாநிலமாக தமிழ்நாடு இருக்கிறது. மொழி, இனம், மானம் காக்கிறது. ஆனால் அடிமை மாடல் சுயமரியாதை இழந்து நிற்கிறது. அடிமை மாடலுக்கு சூடு, சொரணை. வெட்கம் எதுவுமில்லை. மதுரையை மணிப்பூராக மாற்ற திட்டமிடுகிறது. சினிமா மாடல் (விஜய்) என் அளவுக்கு கூட அரசியல் பேசுவதில்லை. நடிகரை பிடித்திருந்தால் விசில் அடிக்கலாமே தவிர நாட்டை கொடுக்க முடியாது. எனவே மக்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும் என பேசியிருக்கிறார்.
பிரகாஷ் பிரகாஷ்ராஜ் மிகவும் வெளிப்படையாக பேசுபவர். கடந்த பல வருடங்களாகவே பிரதமர் மோடியையும் பாஜகவும் கடுமையாக விமர்சித்து வருபவர். விஜயுடன் கில்லி உள்ளிட்ட பல படங்களிலும் நடித்திருக்கிறார்.

