Sunday, May 17, 2026 9:14 pm
அதிகரித்து வரும் பொறுப்புகள் மற்றும் குடும்பக் கடமைகளைக் காரணம் காட்டி, தனது பதவியிலிருந்து விலகும் விருப்பத்தை ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவிடம் முன்னரே தெரிவித்திருந்ததாகவும், தனக்குப் பின் வருபவர் நியமிக்கப்படும் வரை தொடர்ந்து பணியாற்றப்போவதாகவும் மேற்கு மாகாண ஆளுநர் ஹனிஃப் யூசூஃப், கூறினார்.
பதவி இவ்லகுவது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில்,
ஆளுநர் என்ற தனது பொறுப்புகள், ஜனாதிபதியின் வெளிநாட்டு நேரடி முதலீட்டுக்கான சிறப்புத் தூதர் என்ற கூடுதல் பணி , குடும்பக் கடமைகள் ஆகியவற்றைச் சமநிலைப்படுத்துவது பெருகிய முறையில் சவாலாகி வருவதாகவும், தனது பதவி குறித்த சமீபத்திய ஊடக யூகங்களுக்கு மத்தியில், சில காலத்திற்கு முன்பே தனது இராஜினாமா எண்ணத்தை தெரிவித்திருந்ததாக யூசூஃப் தெரிவித்துள்ளார்.
ஆளுநர் பதவியிலிருந்து விலகிய பின்னர், ஜனாதிபதியின் வெளிநாட்டு நேரடி முதலீட்டுக்கான சிறப்புத் தூதர் என்ற தனது தன்னார்வ கௌரவப் பதவியில் தொடர்ந்து பணியாற்ற உத்தேசித்துள்ளதாக அவர் கூறினார். அந்தத் தகுதியில், தனது சர்வதேச வலையமைப்புகள் மற்றும் உறவுகள் மூலம் இலங்கைக்கு முதலீடுகளை ஈர்க்கும் முயற்சிகளுக்குத் தொடர்ந்து ஆதரவளிப்பேன் என்றும் அவர் கூறினார்.
நாட்டுக்குச் சேவை செய்வதில் தான் உறுதியாக இருப்பதாகவும், ஜனாதிபதி தன் மீது வைத்துள்ள நம்பிக்கைக்கு நன்றி தெரிவிப்பதாகவும் யூசுஃப் கூறினார்.

