Sunday, May 17, 2026 9:07 pm
அணுமின் நிலையத்தில் உள்ள மின்சார ஜெனரேட்டரைத் தாக்கிய ட்ரோன், நாட்டின் மேற்கு எல்லையைக் கடந்து வந்த மூன்று ட்ரோன்களில் ஒன்றாகும் என்று ஐக்கிய அரபு அமீரகத்தின் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
மேற்கு எல்லைத் திசையிலிருந்து நாட்டிற்குள் நுழைந்த மூன்று ஆளில்லா விமானங்களை ஐக்கிய அரபு அமீரகத்தின் வான் பாதுகாப்பு அமைப்புகள் இடைமறித்ததாகவும், அவற்றில் இரண்டு வெற்றிகரமாக இடைமறிக்கப்பட்டன, மூன்றாவது ட்ரோன் அல் தஃப்ரா பகுதியில் உள்ள பரக்கா அணுமின் நிலையத்தின் உள் சுற்றுச்சுவருக்கு வெளியே இருந்த ஒரு மின்சார ஜெனரேட்டரைத் தாக்கியது” என்று பாதுகாப்பு அமைச்சு,அறிவித்துள்ளது

