Thursday, September 24, 2026 5:12 pm
ஸ்மார்ட்போன்களுக்கு மாற்றாக கருதப்படும் இந்தச் சிறிய சாதனம், உள்ளங்கை அளவிலேயே வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் உள்ள செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் மூலமாக, நாம் இதுவரை போனில் செய்து வந்த பல்வேறு வேலைகளை எளிதாக மேற்கொள்ள முடியும்.
கையில் சாவிக் கொத்து போல மாட்டிக்கொள்ளும் வகையிலும், கீ செயின் வடிவிலும் இது தயாரிக்கப்பட்டுள்ளது. இதில் அழகிய ஓஎல்இடி திரை இடம்பெற்றுள்ளதுடன், நம்மை பார்த்து அசையும் மற்றும் கையசைக்கும் சிறப்பு அம்சங்களும் கொடுக்கப்பட்டுள்ளன.
மெட்டாவின் மியூஸ் ஏஐ வசதியுடன் குரல்வழி உரையாடல்கள், காணொளிகளை பார்த்தல், பயணங்களை முன்பதிவு செய்தல் மற்றும் மின்னஞ்சல்களை கையாளுதல் போன்ற பல பணிகளை இது செய்யும்.
இதில் 5ஜி இணைப்பு, கமரா ,கைரேகை ,சென்சார் போன்ற நவீன வசதிகள் உள்ளன. விடுமுறை காலத்தை முன்னிட்டு வரும் டிசம்பர் மாதம் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படும் இந்த சாதனம், தொழில்நுட்பப் பரப்பில் மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

