Sunday, August 9, 2026 11:42 am
தமிழகம் ,புதுசேரிக்கு ஆகியவற்றுக்கு இரண்டு நாள் பயணமாக நேற்று சென்னை க்குச் சென்றார்.மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா. தவெக அரசு அமைந்த பிறகு தமிழகத்திற்கு அவர் வந்துள்ள முதல் பயணம் அது. அமைச்சர்கள் யாரும் அமித்ஷாவை வரவேற்க செல்லவில்லை ஆனால் இந்த பயணத்தில் நடந்த சில சம்பவங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளன. அதில் முக்கியமானது அரசு சார்பில் அமைச்சர்கள் யாரும் அமித்ஷாவை வரவேற்கவில்லை. அதேசமயம், சென்னை போலிஸ் கமிஷனர் அமல்ராஜ், அமித்ஷாவை வரவேற்க வருவார் என செய்தி பரவியிருந்தது. ஆனால் அவரும் செல்லவில்லை. சென்னை தெற்கு இணை ஆணையர் விஜயகுமாரை மட்டும் அனுப்பி வைத்தது தவெக அரசு.
தேர்தலுக்கு முன்பு வரை தமிழகத்திற்கு அமித்ஷா வரும் போதெல்லாம், என்.டி.ஏ. கூட்டணியின் தமிழக தலைவர் எடப்பாடி பழனிச்சாமி என்கிற முறையில், அமித்ஷாவை வரவேற்கும் முதல் மரியாதை எடப்பாடி பழனிச்சாமிக்குத் தான் கிடைக்கும். முதல் மரியாதை நயினார் நாகேந்திரனுக்கு எடப்பாடிக்குப் பிறகு தான் பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட மற்ற தலைவர்களுக்குக் கிடைக்கும். ஆனால், தற்போது அந்த முதல் மரியாதை நயினார் நாகேந்திரனுக்கு கொடுக்கப்பட்டது. நயினார் தான் அமித்ஷாவை முதலில் வரவேற்றார். அதன் பிறகுதான் எடப்பாடி மற்றும் அக்ரி கிருஷ்ண மூர்த்திக்கு கொடுக்கப்பட்டது.
டெல்லியிலிருந்து சென்னைக்கு அமித்ஷா செல்லும்போதேபோதே 1 மணி நேரம் காலத்தாமதமாகி விட்டது. அதனால் உடனே திருவண்ணாமலைக்கு ஹெலிகாப்டரில் செல்ல வேண்டியிருந்ததால், யாரிடமும் பேசவில்லை அமித்ஷா. மேகமூட்டம் அதிகமாகி திருவண்ணாமலையில் ஹெலிகாப்டர் தரையிறங்குவதில் சிக்கல் எழுந்தால், திருவண்ணாமலை நிகழ்ச்சியை தவிர்க்க வேண்டியதிருக்கும் என்று அமித்ஷாவிடம் சொல்லப்பட்டிருந்தது. அதனால், சென்னையில் யாருக்கும் தனிப்பட்ட சந்திப்புக்கு அமித்ஷா நேரம் ஒதுக்கவில்லை .

