Saturday, November 28, 2026 12:45 pm
கருங்கடல் பகுதியில் போர்நிறுத்தம் மேற்கொள்வதற்கான நிபந்தனைகள் அடங்கிய முன்மொழிவுகளை உக்ரைன் தனது பங்காளிகளிடம் சமர்ப்பித்துள்ளது. இது குறித்து ரஷ்யாவின் பதிலுக்காக உக்ரைன் காத்திருப்பதாக, அந்நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்ட்ரி சிபிஹா வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.
“நாங்கள் போர்நிறுத்தத்திற்குத் தயாராக இருக்கிறோம்.. இப்போது ரஷ்யாவின் பதிலுக்காகக் காத்திருக்கிறோம். எங்களது அனைத்து முன்மொழிவுகளும் அவர்களிடம் தெரிவிக்கப்பட்டுவிட்டன,” என்று ‘உக்ரைனிலிருந்து உணவு’ (Food from Ukraine) என்ற தலைப்பில் நடைபெற்ற ஐந்தாவது சர்வதேச உயர்மட்ட உணவுப் பாதுகாப்பு மாநாட்டில் சிபிஹா கூறினார்.
கருங்கடல் பகுதியில் கப்பல் போக்குவரத்திற்கான சுதந்திரத்தை மீண்டும் நிலைநாட்டவும், விவசாயப் பொருட்களின் ஏற்றுமதி எவ்விதத் தடையுமின்றி நடைபெறுவதை உறுதி செய்யவும் கீவ் முன்மொழிந்துள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சர் தெரிவித்தார்.
முன்மொழியப்பட்ட இந்த போர்நிறுத்த ஒப்பந்தத்தில், கச்சா எண்ணெய் ஏற்றுமதி தொடர்பான அம்சங்களையும் சேர்க்க ரஷ்யா விரும்புவதாகவும் அவர் குறிப்பிட்டார்

