Saturday, May 30, 2026 8:32 pm
சிங்கப்பூரில் நடந்த பாதுகாப்பு உச்சிமாநாட்டில் பேசிய பென்டகன் தலைவர் பீட் ஹெக்ஸெத் , அமெரிக்காவிடம் போதுமான அளவுக்கும் அதிகமான ஆயுதக் கையிருப்பு உள்ளது என்றும், ஈரானுடனான போரை மீண்டும் தொடங்குவதற்கு அது “முழுத் திறனையும்” கொண்டுள்ளது என்றும் கூறினார்.
சீனாவின் இராணுவ பலப் பெருக்கம் குறித்து சிங்கப்பூர் பாதுகாப்பு உச்சிமாநாட்டில் உரையாற்றிய பென்டகன் தலைவர் பீட் ஹெக்ஸெத் மேலும் தெரிவிகையில்,
” தேவையற்ற மோதலை அமெரிக்கா நாடவில்லை. தேவைப்பட்டால் மீண்டும் போரைத் தொடங்கும் திறன் எங்களிடம் முழுமையாக உள்ளது. சிறப்பான மற்றும் அதிக அளவில் உள்ள ஆயுதங்களை நாங்கள் சமநிலைப்படுத்தும் விதத்தின் காரணமாக, அங்கும் உலகெங்கிலும் உள்ள எங்கள் கையிருப்புகள் அதற்கு மிகவும் பொருத்தமானவை ” என்றார்.
போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையிலான அமைதி ஒப்பந்தம் எட்டப்படாமல் இருந்த நிலையில், ஹெக்ஸெத்தின் இந்தக் கருத்துக்கள் வெளிவந்தன.
ஹோர்முஸ் ஜலசந்தியைத் திறப்பது , அந்நாட்டின் அணுசக்தித் திட்டத்தை ஒழிப்பது உள்ளிட்ட, தெஹ்ரானின் முக்கிய சலுகைகளைக் கொண்ட ஈரான் அமைதி ஒப்பந்தத்திற்குத் தன்னால் ஒப்புதல் அளிக்க முடியும் என்று டொனால்ட் ட்ரம்ப் வெள்ளிக்கிழமை கூறினார்.
ஆனால், இறுதி உடன்பாடு எட்டப்படவில்லை என ஈரானின் உயர்மட்ட அதிகாரிகள் தெரிவித்தனர்

