Sunday, May 24, 2026 8:16 pm
உலகக்கிண்ணப் போட்டிக்குத் தகுதி பெற்ற ஈரானிய அணி தனது பயிற்சி முகாமை அமெரிகாவில் இருந்து மெக்ஸிகோவுக்கு மாறியுள்ளதாக ஈரானிய உதைப்ந்தாட்ட நிர்வாக அமைப்பின் தலைவர் மெஹ்தி தாஜ் தெரிவிதுள்ளார்.
அரிசோனாவின் டக்சனில் ஈரான் பயிற்சி பெற திட்டமிடப்பட்டிருந்தது, ஆனால் மத்திய கிழக்கில் நிலவும் போர் குறித்த நிச்சயமற்ற தன்மை , பாதுகாப்பு கவலைகள் காரணமாக இடமாற்றம் செய்யப்படுவதற்கான சாத்தியம் உள்ளது. டக்சனின் கினோ விளையாட்டு வளாகத்தின் அதிகாரிகள் இதுகுறித்து எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை.சான் டியாகோவிற்குச் சற்று தெற்கே உள்ள மெக்சிகோவின் டிஜுவானாவில் இனி அணி முகாமிடும் என்று கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
ஈரான் அணி, குரூப் ஜி போட்டிகளுக்காக ஜூன் 15 அன்று கலிபோர்னியாவின் இங்கிள்வுட்டில் நியூசிலாந்துடனும், ஆறு நாட்கள் கழித்து பெல்ஜியத்துடனும் விளையாடுகிறது. பின்னர், ஜூன் 26 அன்று சியாட்டிலில் எகிப்தை எதிர்கொள்கிறது. லாஸ் ஏஞ்சல்ஸின் புறநகர்ப் பகுதியான இங்கிள்வுட்டிற்கு டிஜுவானா ஒப்பீட்டளவில் அருகாமையில் இருப்பது அணிக்கு நன்மை பயக்கும் என்றும், இந்தப் புதிய இடத்தில் “அனைத்துப் பயிற்சி வசதிகள், உடற்பயிற்சிக் கூடம், தனியார் உணவகம் மற்றும் அணிக்குத் தேவையான அனைத்தும் அடங்கும்” என்றும் கூட்டமைப்பு கூறியுள்ளது.
ஈரான் தொடர்ந்து நான்காவது முறையாகவும், ஒட்டுமொத்தமாக ஏழாவது முறையாகவும் உலகக் கிண்ணப் போட்டியில் பங்கேற்கிறது. அது இதுவரை முதல் சுற்றைத் தாண்டி முன்னேறியதில்லை.

