Saturday, July 18, 2026 11:43 pm
உலகக்கிண்ண உதைபந்தாட்டத் திருவிழா இன்றுடன் நிறைவடைகிறது. ஆர்ஜென்ரீனாவும், ஸ்பெய்னும் இன்றைய போட்டியில் மல்லுக் கட்டுகின்றன. நான்காவது சம்பியனாகி ஆர்ஜென்ரீனா சரித்திரம் படைக்குமா அல்லது ஆர்ஜென்ரீனாவின் வெற்றிப் பாதையை ஸ்பெய்ன் முடிவுக்குக் கொண்டு வருமா என்ற ஆர்வம் உலகெங்கிலும் இருக்கும் விளையாட்டு ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
இத்தாலி,[2026],ஸ்பெய்ன் [2010], ஜேர்மனி,[2014],பிரன்ஸ்[ 2018] தொடர்ச்சியாக என்கு முறை ஐரோப்பாவில் சுற்றிக்கொண்டிருந்த உலகக் கிண்ணத்தை 2022 ஆம் ஆண்டு ஆர்ஜென்ரீனா தென் அமெரிக்காவுக்குக் கொண்டு சென்றது. உலகக்கிண்ணம் மீண்டும் தென் அமெரிக்காவில் தங்குமா அல்லது ஐரோப்பாவுக்கொக் கொண்டு செல்லப்படுமா என்ற ஆர்வம் உதைபந்தாட்ட ரசிகர்களிடம் ஏற்பட்டுள்ளது.
ஆர்ஜென்ரீனாவும், ஸ்பெய்னும் இது வரை 14 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. தலா ஆறு முறை ஆர்ஜென்ரீனாவும், ஸ்பெய்னும் வெற்றி பெற்றன. இரண்டு போட்டிகள் சமநிலையில் முடிவடைந்தன.
முதல் போட்டி சர்வதேச நட்புப் போட்டி (7 டிசம்பர் 1952)
கடசியான சந்திப்பு: சர்வதேச நட்புப் போட்டி (27 மார்ச் 2018)
ஆர்ஜென்ரீனா, ஸ்பெயின் அணிகளுக்கு இடையேயான அனைத்துப் போட்டிகளின் முழுமையான நேருக்கு நேர் முடிவுகள் .
27 மார்ச் 2026 இரத்து செய்யப்பட்டது ஃபைனலிசிமா
27 மார்ச் 2018 அன்று நடைபெற்ற சர்வதேச நட்புப் போட்டியில் ஸ்பெயின் 6-1 என்ற கோல் கணக்கில் வென்றது
7 செப்டம்பர் 2010 அன்று நடைபெற்ற சர்வதேச நட்புப் போட்டியில் ஆர்ஜென்ரீனா 4-1 என்ற கோல் கணக்கில் வென்றது
14 நவம்பர் 2009 ஸ்பெயின் 2-1 என்ற கோல் கணக்கில் வென்றது சர்வதேச நட்புப் போட்டி
11 ஒக்டோபர் 2006 ஸ்பெயின் 2-1 என்ற கோல் கணக்கில் வென்றது சர்வதேச நட்புப் போட்டி
17 நவம்பர் 1999 அன்று நடைபெற்ற சர்வதேச நட்புப் போட்டியில் ஆர்ஜென்ரீனா 2-0 என்ற கோல் கணக்கில் வென்றது ச
20 செப்டம்பர் 1995 அன்று நடைபெற்ற சர்வதேச நட்புப் போட்டியில் ஸ்பெயின் 2-1 என்ற கோல் கணக்கில் வென்றது
12 ஒக்டோபர் 1988 1-1 என்ற கோல் கணக்கில் சமன் சர்வதேச நட்புப் போட்டி
12 ஒக்டோபர் 1974 1-1 என்ற கோல் கணக்கில் சமன் கோபா ஹிஸ்பானிடாட்
11 ஒக்டோபர் 1972 ஸ்பெயின் 1-0 என்ற கோல் கணக்கில் வென்றது கோபா ஹிஸ்பானிடாட்
13 ஜூலை 1966 ஆர்ஜென்ரீனா 2-1 என்ற கோல் கணக்கில் வென்றது உலகக் கிணப் போட்டி.
11 ஜூன் 1961 ஸ்பெயின் வென்றது 2-0 என்ற கோல் கணக்கில் சர்வதேச நட்புப் போட்டி
24 ஜூலை 1960 நடைபெற்ற சர்வதேச நட்புப் போட்டியில் ஆர்ஜென்ரீனா 2-0 என்ற கோல் கணக்கில் வென்றது
5 ஜூலை 1953 அன்று நடைபெற்ற சர்வதேச நட்புப் போட்டியில் 1-0 என்ற கோல் கணக்கில் வென்றது
7 டிசம்பர் 1952 அன்று நடைபெற்ற சர்வதேச நட்புப் போட்டியில் 1-0 என்ற கோல் கணக்கில் வென்றது

