Tuesday, August 4, 2026 6:46 am
ஈரானுடனான பேச்சுவார்த்தைகள் எவ்வாறு செல்கின்றன என்பது குறித்து “இன்றோ நாளையோ” மக்களுக்குத் தெரியவரும் என ஜனாதிபதி ட்ரம்ப் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
” அவர்கள் எப்படியாவது விரைவாகச் செயல்படப் போகிறார்கள். இது மிகவும் சிக்கலானதல்ல,” “நாம் பேசுவது ஜலசந்தியைப் பற்றி, அதன் திறப்பைப் பற்றி, அதாவது நாளைக்குள் அதைத் திறந்துவிடுவது பற்றி. முழுமையாகத் திறந்துவிடுவது. இது முதல் கட்டம், இரண்டாம் கட்டமாக நாம் அணுசக்தித் திறன். அதாவது ஈரானை அணு ஆயுதமற்ற நாடாக மாற்றுவது பற்றிப் பேசுவோம்” என்றார்.
தற்போது அமெரிக்காவுடன் நேரடியாகப் பேச்சுவார்த்தை நடத்தவில்லை என ஈரான் தெரிவித்தபோதிலும், பேச்சுவார்த்தைகள் தொடங்கும் என ட்ரம்ப் தெரிவித்தார்.

