Wednesday, August 5, 2026 5:37 am
குவாத்தமாலாவின் ஃபியூகோ எரிமலையில் ஏற்பட்ட வெடிப்பினால் எரிமலைக்குழம்பும் சாம்பல் மேகங்களும் வெளியேறியதைத் தொடர்ந்து, அதன் சரிவுகளில் வசித்து வந்த நூற்றுக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர்.
மத்திய அமெரிக்காவின் மிகவும் சுறுசுறுப்பான எரிமலை திங்கட்கிழமை காலை வெடித்தது. இரவு நேரத்திற்குள் நிலைமைகள் தீவிரமடைந்ததைத் தொடர்ந்து, அதிகாரிகள் நாட்டின் இரண்டாவது மிகக் கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளனர்.
குவாத்தமாலா நகரத்திலிருந்து 100 கிலோமீற்றருக்கும் (62 மைல்கள்) குறைவான தொலைவில் அமைந்துள்ள 3,763 மீற்றர் (12,346 அடி) உயர எரிமலையிலிருந்து, செவ்வாய்க்கிழமை வாக்கில் எரிமலைக்குழம்பு ஆறுகளாகப் பாய்ந்து கொண்டிருந்தது . சாம்பல், செந்நிற வானத்தில் ஆறு கிலோமீற்றர் (3.73 மைல்கள்) உயரத்திற்கு எழுந்தது.
“அதிகாலை முதலே அது தீவிரமாக இருந்தது. அன்று இரவு, நாம் வெளியேற வேண்டும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டது,” என அப்பகுதிவாசியான 68 வயதான அலெஜான்ட்ரோ கார்சியா, ஏஎஃப்பி செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.

