Saturday, November 7, 2026 8:51 am
வெள்ளை மாளிகை தலைமை அதிகாரியாக (White House Chief of Staff) சூசி வைல்ஸுக்குப் பதிலாக 9ஆம் திகதி முதல் ஸ்டீபன் மில்லர் பொறுப்பேற்பார் என்று அமெரிக்க ஜனாதிஅப்தி டொனால்ட் ட்ரம்ப், வெள்ளிக்கிழமை அறிவித்தார்.
“ட்ரம்ப் நிர்வாகத்தின் தற்போதைய துணை தலைமை அதிகாரியும், எனக்கு மிகவும் நம்பிக்கைக்குரிய ஆலோசகர்களில் ஒருவருமான ஸ்டீபன் மில்லர், நவம்பர் 9, 2026 திங்கட்கிழமை முதல் தலைமை அதிகாரியாகப் பொறுப்பேற்பார் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்,” என்று ட்ரம்ப் ‘ட்ரூத் சோஷியல்’ (Truth Social) தளத்தில் பதிவிட்டுள்ளார்.
சூசி வைல்ஸ், ட்ரம்ப்பின் அரசியல் செயல்பாட்டுப் பிரிவிற்கு (Trump Political Operation) மாறவுள்ளார் என்று ட்ரம்ப் தெரிவித்தார், ஆனால் இது குறித்த கூடுதல் விவரங்களை அவர் வழங்கவில்லை.
ட்ரம்ப்பின் மிகவும் விசுவாசமான உதவியாளர்களில் ஒருவரான மில்லர், ட்ரம்ப் நிர்வாகத்தின் கடுமையான குடியேற்றக் கொள்கைகள் மற்றும் நாடு கடத்தும் கொள்கைகளை வடிவமைத்தவர்களில் முதன்மையானவராகக் கருதப்படுகிறார்.
இடைக்காலத் தேர்தல்களில் குடியரசுக் கட்சியினர் பெரும் பின்னடைவைச் சந்தித்து, நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் மீதான கட்டுப்பாட்டையும் ஜனநாயகக் கட்சியினரிடம் இழந்த சில நாட்களிலேயே, டிரம்ப்பின் குழுவில் இந்த மாற்றம் ஏற்பட்டுள்ளது.

