Sunday, May 10, 2026 5:43 pm
தவெக தலைவர் விஜய்யின் பதவியேற்பு விழாவில் “10” இலக்க சென்டிமென்ட் பலரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.
பதவியேற்பு விழாவிற்காக விஜய் தேர்வு செய்ததில 10 முக்கியமாக உள்ளது. இது தானாக அமைந்ததா அல்லது விஜய்யின் சென்டிமென்ட் காரணமாக இது முடிவு செய்யப்பட்டதா என தெரியவில்லை. விஜய் விரும்பும் நாளில் பதவியேற்கலாம் என்று தான் கவர்னர் கூறியதாக சொல்லப்படுகிறது. தவெக தரப்பில் தான் இன்றே பதவியேற்பு விழா வைக்க வேண்டும் என சொன்னதாகவும் சொல்லப்படுகிறது.
இன்று திகதி 10 (மே 10), வருடத்தின் கூட்டு தொகையும் 10 (2+0+2+6=10), மாதத்தை 2ஆல் பெருக்கினாலும் 10. விஜய் முதல்வராக பதவியேற்பு விழாவிற்காக நிர்ணயிக்கப்பட்ட நேரமும் 10. விஜய்யுடன் பதவியேற்றுக் கொண்ட கட்சி உறுப்பினர்களின் எண்ணிக்கையும் 10.
இவை அனைத்தையும் விட மிக முக்கியமான ஒன்று பத்து மாதம் நம்மைச் சுமந்து பெற்றெடுக்கும் அம்மாவைக் கொண்டாடும், அன்னையர் தினம். விஜய் அவரது அம்மா ஷோபா மீது மிகுந்த பாசம் கொண்டவர். அந்த சென்ட்மென்ட் காரணமாகவும் இன்று பதவியேற்பு விழாவை வைத்திருக்கலாம்.
பதவியேற்பிற்காக மே 10 ம் திகதியை தேர்வு செய்ததும் சென்டிமென்ட் ,ஜோதிடரின் ஆலோசனையின் பேரில் தான் நடந்ததாக சொல்லப்படுகிறது.

