Sunday, July 26, 2026 8:37 am
மேற்கு கனடாவில் உருவான ஆயிரக் கணக்கான மின்னலால் புதிய காட்டுத்தீ பரவுகிறது. பிரிட்டிஷ் கொலம்பியாவில் குறைந்தது 90 இடங்களில் காட்டுத்தீ தீவிரமாக எரிந்து கொண்டிருக்கிறது. இது நாட்டின் வரலாற்றிலேயே மிகவும் தீவிரமான பருவக்காலங்களில் ஒன்று என பிரதமர் கூறினார்.
ஒரு சூழலை நாடு எதிர்கொண்டு வரும் நிலையில், மேற்கு கனடாவில் புதிய காட்டுத்தீக்கள் வெடித்துள்ளன , மேலும் ஒன்டாரியோவில் காடுகள் தொடர்ந்து எரிந்து வருகின்றன.
கடந்த வாரத்தில் ஏற்பட்ட சுமார் 34,000 மின்னல் தாக்குதல்கள், தெற்கு பிரிட்டிஷ் கொலம்பியாவில் தொடர்ச்சியான தீ விபத்துகள் உருவாகின. ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றப்பட்டனர்.
வெப்பமயமாதல் ,வறட்சி நிலைகள் காரணமாக அவை பரவக்கூடும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.வான்கூவரிலிருந்து 320 மைல்கள் (520 கி.மீ.) தொலைவில் உள்ள கிம்பர்லிக்கு அருகே தொடர் காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது.
அதிகரித்த வெப்பநிலையால் ஏற்பட்ட கடுமையான வெப்பம் , மின்னல் புயல்கள் ஆகியவற்றால் தூண்டப்பட்ட காட்டுத்தீ, இந்த கோடையில் கனடா முழுவதும் உள்ள தொலைதூரக் காடுகளை எரித்துள்ளது. அவற்றிலிருந்து எழுந்த புகை, கடந்த வாரம் அமெரிக்காவின் கிழக்குக் கடற்கரை, மத்திய மேற்குப் பகுதிகளில் உள்ள பெரிய நகரங்கள் முழுவதும் பரவியது.

