Wednesday, September 2, 2026 11:00 pm
முதலமைச்சர் ஜோசப் விஜய் மேட்டூர் அணையை திறப்பதற்காக இன்று மேட்டூருக்கு சென்றார். சென்னையிலிருந்து தனி விமானம் மூலம் சேலம் சென்ற விஜய் அங்கிருந்து காரில் மேட்டூர் சென்றார்.
பட்டு வேட்டி சட்டையில் சென்ற முதல்வர் விஜய் 11 மணியளவில் திறக்கப்பட்ட நீரில் மலர்களை தூவினார். இன்று முதல் அடுத்த 45 நாட்களுக்கு விவசாயிகளின் பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படவிருக்கிறது.
தண்ணீரை திறந்து வைத்த பின் சின்னக்காவூரில் விவசாயிகளை முதல்வர் விஜய் சந்தித்து உரையாடிபோது மூதாட்டி ஒருவர் அவருடன் மிகவும் பாசமாக பேசி அவருடன் நடந்து சென்றார். அப்போது விஜய் தன்னிடமிருந்து சன் கிளாஸை அவருக்கு போட்டுவிட்டார். மூதாட்டி அந்த கண்ணாடியை அணிந்துகொண்டே விஜயுடன் வலம் வந்தார்.
அந்த கண்ணாடியின் விலை 30 ஆயிரம் ரூபா முதல் முதல் 40 ஆயிரம் ரூபாவரை வரை இருக்கலாம் என செய்திகள் வெளியாகியிருக்கிறது.

