Sunday, November 1, 2026 8:46 pm
‘ஒன்றிணைந்த தேசம்’ என்ற நடவடிக்கையின் கீழ், 2025 ஆம் ஆண்டு ஒக்டோபர் 30 ஆம் திகதி முதல்2026 ஆம் ஆண்டு நவம்பர் 1 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் போதைப்பொருள் தொடர்பான சோதனைகளின் போது மொத்தம் 11,970 குழந்தைகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
புள்ளிவிவரங்களின்படி, கைது செய்யப்பட்டவர்களில் 11,737 சிறுவர்களும், 233 சிறுமிகளும் அடங்குவர்.
இந்த நடவடிக்கை தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என்றும், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல்களுக்கு எதிராக மேலதிக நடவடிக்கைகள் எடுக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.

