Tuesday, November 3, 2026 4:54 pm
இலங்கை முழுவதும் உள்ள சகல பொலிஸ் நிலையனகளிலும் சிசிரிவி கமராக்கள் பொருத்தப்படும் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ஏஎஸ்பி எஃப்.யு. வூட்லர் தெரிவித்தார்.
திட்டத்திற்கான கொள்முதல் ஏற்கனவே நடைபெற்று வருவதாகவும், கமராக்களில் பதிவாகும் காணொளிக் காட்சிகள் மூலம் பொலிஸ் நிலையங்களைக் கண்காணிக்க ஏற்பாடுகள் செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
பொலிஸ் நிலையக் காவலில் உள்ள சந்தேக நபர்கள் நடத்தப்படும் விதம் குறித்த கவலைகளுக்கு மத்தியில், இந்த நடவடிக்கை பொலிஸ் நிலையங்களில் வெளிப்படைத்தன்மை , பொறுப்புணர்வை மேம்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், சிசிரிவி கமராக்களை நிறுவும் பணியை முடிப்பதற்கான காலக்கெடுவையோ அல்லது மைய கண்காணிப்பு அமைப்பு எவ்வாறு செயல்படும் என்பது குறித்த விவரங்களையோ காவல்துறை அறிவிக்கவில்லை.
மரணங்கள், பொலிஸ் காவலில் உள்ள சந்தேக நபர்கள் தவறாக நடத்தப்பட்டதாகக் கூறப்படும் சம்பவங்கள் குறித்து பொதுமக்கள் மீண்டும் கவனம் செலுத்தி வரும் வேளையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

