Sunday, November 1, 2026 5:40 pm
ஜியானி இன்ஃபான்டினோவின் மறுதேர்தல் பிரச்சாரத்தின் போது பீபாவைச் சுற்றியுள்ள அரசியலுக்கு எதிர்ப்பு தெரிவித்து, இரண்டு முறை உலகக் கிண்ணப் பயிற்சியாளரான டகேஷி ஒகாடா, ஜப்பானிய உதைபந்தாட்ட கூட்டமைப்பின் துணைத் தலைவர் பதவியை இராஜினாமா செய்தார்.
மார்ச் மாதம் நடைபெறும் தேர்தலில் தனது நான்காவது , இறுதியுமான தலைவர் பதவிக்காலத்தை நாடும் இன்ஃபான்டினோவுக்கு ஆசிய உதைபந்தாட்ட்ட கூட்டமைப்பு பகிரங்கமாக ஆதரவளித்து தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்ட 24 மணி நேரத்திற்குப் பிறகு, கடந்த சனிக்கிழமை திகதியிட்ட ஒகாடாவின் இராஜினாமா அறிக்கையை ஜப்பானின் உதைபந்தாட்ட அமைப்பு புதன்கிழமை வெளியிட்டது.
இன்ஃபான்டினோ தனது தோல்வியுற்ற உலகக் கிண்ண விற்பனைத் திட்டம், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புடன் உள்ள தொடர்புகள் உள்ளிட்ட பரந்த நிர்வாக பாணி காரணமாக ஜூலை மாதம் முதல் கடுமையான எதிர்ப்பை எதிர்கொண்டு வருகிறார். இது ஐரோப்பா, வட அமெரிக்கா ஆரம்பத்தில் ஆசியாவில் உள்ள உதைபந்தாட்டத் தலைவர்களிடையே பெரும் சீற்றத்தைத் தூண்டியுள்ளது.
இன்ஃபான்டினோ,ஜப்பான்,இராஜிநாமா, விளையாட்டு,உதைபந்தாட்டம், ஆசியா,ஐரோப்பா,வட அமெரிக்கா,பீபா

