Tuesday, May 19, 2026 4:32 pm
சமீபத்திய கனமழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஒரு ஹெக்டேருக்கு 1,00,000 ரூபாவரை இழப்பீடு வழங்கப்படும் என வேளாண் அமைச்சு தெரிவித்துள்ளது.
நெல், மக்காச்சோளம், உருளைக்கிழங்கு, சோயாபீன்ஸ், மிளகாய் , பெரிய வெங்காயம் உள்ளிட்ட பயிர்களுக்கு ஏற்படும் சேதங்களுக்கு இழப்பீடு வழங்கப்படும்.சேதமடைந்த பயிர்களை 14 நாட்களுக்குள் வேளாண் சேவை மையங்கள் மூலம் தெரிவிக்குமாறு விவசாயிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த இழப்பீட்டுத் திட்டத்திற்காக விவசாயிகளிடமிருந்து எந்தக் காப்பீட்டு பிரீமியமும் வசூலிக்கப்படாது என்றும் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

