Saturday, August 15, 2026 11:35 am
பார்சிலோனாவின் முன்னாள் பயிற்சியாளர் ஸாவி ஹெர்னாண்டஸ் [40] , நெதர்லாந்து தேசிய உதைப்ந்தாட்ட அணியின் புதிய தலைமைப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஸ்பெயின் நாட்டவரான ஸாவி , 2030 ஆம் ஆண்டு நடைபெறும் உலகக் கிண்ணப் போட்டி வரை அணியை வழிநடத்த நான்கு ஆண்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளார்.
உலகக் கிண்ணப் போட்டியில் , மொராக்கோவுக்கு எதிரான கடைசி 32 சுற்றில் ஏற்பட்ட ஏமாற்றமளிக்கும் தோல்வியைத் தொடர்ந்து இராஜினாமா செய்த ரொனால்ட் கோமனிடமிருந்து இவர் பொறுப்பேற்கிறார்.
1978-ல் ஆஸ்திரியரான எர்ன்ஸ்ட் ஹாப்பலுக்குப் பிறகு, நெதர்லாந்தை வழிநடத்தும் முதல் டச்சு அல்லாத பயிற்சியாளர் ஸாவி என்பதால், அவரது நியமனம் குறிப்பாகக் குறிப்பிடத்தக்கது.
அவர் கூறினார், “டச்சு தேசிய அணியின் தலைமைப் பயிற்சியாளராக ஆவதை நான் ஒரு மிகப்பெரிய கௌரவமாகக் கருதுகிறேன்.”
முன்னாள் நடுக்கள வீரரான அவர், ஜோஹான் க்ரூஃப் மற்றும் ரினஸ் மைக்கேல்ஸ் போன்ற செல்வாக்கு மிக்கவர்களின் கீழ் எஃப்சி பார்சிலோனா அகாடமியில் பயிற்சி பெற்றதன் காரணமாக, நெதர்லாந்து உதைபந்தாட்த்துடனான தனக்குள்ள வலுவான பிணைப்பையும் வலியுறுத்தினார்.

