Wednesday, June 10, 2026 4:31 pm
அமெரிக்கத் தாக்குதல்களைத் தொடர்ந்து ஈரானில் ஆயிரக்கணக்கானோருக்கு நீர் விநியோகம் துண்டிக்கப்பட்டது என அரசு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தெற்கு துறைமுக நகரமான சிரிக்கில் உள்ள இரண்டு நீர்த்தேக்கங்களை அமெரிக்கத் தாக்குதல்கள் தாக்கியதைத் தொடர்ந்து, ஆயிரக்கணக்கான ஈரானியர்கள் குடிநீர் விநியோகத்தை இழந்துள்ளனர் என்று ஈரானிய அரசு ஊடகங்கள் புதன்கிழமை தெரிவித்தன.
வளைகுடா கடற்பரப்பில் அமெரிக்க ராணுவத்தின் அப்பாச்சி ஹெலிகாப்டரை ஈரான் சுட்டு வீழ்த்தியதாக வாஷிங்டன் கூறியதைத் தொடர்ந்து, அமெரிக்கா தெற்கு நகரங்களான ஜஸ்க் மற்றும் சிரிக் மீதும், ஹோர்முஸ் ஜலசந்தியில் உள்ள கெஷ்ம் தீவு மீதும் தாக்குதல்களை நடத்தியது.
இந்தத் தாக்குதல்களால், சிரிக் நகரின் பெமானி ,கோஹெஸ்டாக் பகுதிகளுக்கு நீர் வழங்கும் இரண்டு நீர்த்தேக்கங்கள் சேதமடைந்தன.

