Friday, November 13, 2026 2:41 pm
இலங்கையின் தெற்கு கடற்கரைக்கு அப்பால், மீன்பிடிப் படகு ஒன்றிலிருந்து சுமார் 52 கிலோ ஹெரோயின் , 50 கிலோவிற்கும் அதிகமான கிரிஸ்டல் மெத்தாம்பேட்டமைன் (‘ஐஸ்’) உள்ளிட்ட, 100 கிலோவிற்கும் அதிகமான போதைப்பொருட்களை இலங்கை கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர். நவம்பர் 11-ஆம் திகதி அதிகாலை, புலனாய்வுப் பிரிவு ஒன்றிணைந்து மேற்கொண்ட கூட்டு நடவடிக்கையின் போது இந்தப் படகு இடைமறிக்கப்பட்டது.
படகிலிருந்த ஐவர் கைது செய்யப்பட்டதுடன், மேலதிக விசாரணைகளுக்காக அந்த மீன்பிடிப் படகு காலி துறைமுகத்திற்குக் கொண்டு வரப்பட்டது. முதற்கட்ட விசாரணைகளின்படி, அந்தப் படகு படகு செப்டம்பர் 21-ஆம் திகதி மிரிஸாவிலிருந்து புறப்பட்டமை தெரியவந்துள்ளது.

