Saturday, October 24, 2026 4:52 pm
தமிழக சட்டமன்ற தேர்தலில் முடிவில் தவெக 108 தொகுதிகளில் வெற்றி பெற்றது. திமுக இரண்டாம் இடத்திற்கும், அதிமுக மூன்றாம் இடத்திற்கும் சென்றது. அபோது தவெக ஆட்சி அமைப்பது தடுப்பதற்காக திமுகவின் ஆதரவோடு எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சராக முயன்றார் என அதிமுகவின் முக்கிய நிர்வாகி மற்றும் எம்.எல்.ஏ சிவி சண்முகம் கூறியிருந்தார்.
இதற்காக திமுகவுக்கு, அதிமுகவுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடந்ததாகவும், ஆனால் கம்யூனிஸ்ட், முஸ்லீம் லீக் கட்சிகளும் அதை ஏற்கவில்லை எனவும் அவர் கூறியிருந்தார். அதேபோல் திருமாவளவனை முதலமைச்சராக முன்னிறுத்தி பேச்சுவார்த்தை நடந்தது எனவும் அவர் கூறியிருந்தார்.
அதன்பின் அதிமுகவிலிருந்து ஏழு எம்எல்ஏக்கள் தங்களின் பதவிகளை இராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்தனர். இதை அதிமுகவும், திமுகவும் கடுமையாக விமர்சனம் செய்து வருகிறது. குறிப்பாக தவெக குதிரை நேரத்தில் ஈடுபட்டு வருவதாக இரண்டு கட்சிகளும் கூறி வருகின்றன. ஆனால், திமுகவின் ஆதரவில் அதிமுக ஆட்சியமைக்க முயன்றதால்தான் அதிமுக எம்.எல்.ஏக்கள் ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்தனர் என தவெக தரப்பு கூறி வருகிறது.
இந்நிலையில், இது தொடர்பாக செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் ‘திமுகவும் அதிமுகவும் எந்த காலத்திலும் ஒன்று சேராது. அது பொய் பிரச்சாரம். திருமாவளவனை முன்னிறுத்தி ஒரு முயற்சி நடந்தது. அதிமுகவை ஆதரித்ததால் பாஜகவை ஆதரிப்பது போல் ஆகிவிடும் என கம்யூனிஸ்ட்டுகள் பின்வாங்கினார். அதனால்தான் அது நடக்கவில்லை’ எனக் கூறியிருக்கிறார்.

