Friday, May 22, 2026 11:33 am
தமிழக சட்ட மன்றத் தெர்தலில் வெற்றி பெற்ற சி.வி.சண்முகம் ராஜ்யசபாஎம்.பி பதவியை இராஜினாமா செய்ததால், அந்த இடத்தை நிரப்ப வரும் ஜூன் 18 ஆம் திகதி ராஜ்யசபா இடைத்தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 107 எம்.எல்.ஏக்களை பெற்றுள்ள தவெகவுக்கு முதல் எம்.பி கிடைக்க பிரகாசமான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. தவெக சார்பில் முதல் எம்.பி ஆகப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இந்த ராஜ்யசபா எம்.பியை மாநிலங்களவை உறுப்பினர் வாக்களித்து தேர்ந்தெடுப்பார்கள். ஒரே ஒரு இடத்திற்குத் தேர்தல் நடக்கும்போது, சட்டமன்றத்தில் எந்தக் கட்சிக்கு அல்லது எந்தக் கூட்டணிக்கு அதிகபட்ச எம்.எல்.ஏ-க்களின் ஆதரவு (50% மேல்) இருக்கிறதோ, அவர்களது வேட்பாளர் மட்டுமே வெற்றி பெற முடியும். y தற்போது தவெக-வுக்கு தனித்து 107 எம்.எல்.ஏ-க்கள் உள்ளனர். மேலும், காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்டுகள் ஆகிய கூட்டணிக் கட்சிகளின் பலத்தையும் சேர்த்தால் 119 வருகிறது. தவெக தலைமையிலான அரசுக்கு எஸ்பி வேலுமணி – சிவி சண்முகம் தரப்பும் ஆதரவு அளித்துள்ளதால் அதன் பலம் 144 ஆக உயர்கிறது.
இதனால், எதிர்க்கட்சிகளான திமுக-வோ அல்லது அதிமுக-வோ தங்களது வேட்பாளர்களை நிறுத்தினாலும், தவெக கூட்டணி வேட்பாளரை வீழ்த்துவது சாத்தியமில்லை.
தமிழக வெற்றிக் கழகம் சார்பில் யார் ராஜ்யசபா வேட்பாளராக முன்னிறுத்தப்படுவார் என்ற எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி ரவி, விஜய்யின் அரசியல் ஆலோசகர் ஜான் ஆரோக்கியசாமி, விஜய்யின் நெருங்கிய நண்பரான ஜெகதீஷ், தவெக செய்தி தொடர்பாளர் ஜோதிடர் ரிக்கி ராதன் பண்டிட் வெற்றிவேல் உள்ளிட்ட பலரின் பெயர்கள் பரிசீலனையில் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

