Friday, May 22, 2026 10:58 am
ஹட்டன் டிக்கோயா நகரில் உள்ள கடையொன்றில் தனியாக வசித்து வந்த வயோதிப தம்பதியினர் கூர்மையான ஆயுதங்களால் தாக்கி படுகொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு கொலை செய்யப்பட்டவர்கள் இருவரும் 82 வயதுடையவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
கொல்லப்பட்ட தம்பதியினரின் பிள்ளைகள் கொழும்பு பகுதியில் வசித்து வருவதாகவும், கொலை செய்யப்பட்ட தம்பதியினர் சில காலமாக கடையை நடத்தி வந்ததாகவும், தற்போது கடையை மூடிவிட்டு தனியாக வசித்து வந்ததாகவும் ஹட்டன் பொலிஸார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேலும் யாராவது கடைக்குள் நுழைந்து, இருவரையும் கொன்றுவிட்டு தப்பிச் சென்றார்களா? அல்லது இது குடும்பத் தகராறா? என்பது குறித்து ஹட்டன் பொலிஸார் பல்வேறு வழிகளில் மூலம் விசாரணை நடத்தி வருகின்றனர். தம்பதியினர் இடத்தில் கொலை செய்து, கொலை செய்யப்பட்ட பெண் மாத்திரம் இழுத்துச் செல்லப்பட்டு படிக்கட்டுகளில் வீசப்பட்டிருந்ததாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இறந்தவரின் பிள்ளைகள் நேற்று (21) பிற்பகல் முதல் தங்கள் பெற்றோருக்குப் தொடர்ந்து பலமுறை தொலைபேசியில் ஏற்படுத்திய போதும் பெற்றோர் அழைப்புகளுக்குப் பதிலளிக்காததால், அயலவர்களிடம் இது குறித்து தகவல் தெரிவித்து, கடையைத் திறந்து பார்க்கும் படி கூறிய போதே இருவரும் கொலை செய்து கிடப்பது தெரியவந்ததன் பின் ஹட்டன் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.
கொலை நடந்த சம்பவ இடத்திற்கு வந்த ஹட்டன் மாவட்ட நீதிபதி மற்றும் நீதவான் பீட்டர் போல் சம்பவ இடத்திலேயே ஆய்வு நடத்தி, டிக்கோயா ஆதார வைத்தியசாலையின் தடயவியல் வைத்தியரின் உதவியுடன், பிரேதப் பரிசோதனைக்காக சடங்கலை டிக்கோயா ஆதார வைத்திய சாலையின் தடயவியல் வைத்தியரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இச் சம்பவம் குறித்து ஹட்டன் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் .

