Wednesday, June 17, 2026 9:15 pm
அமெரிக்க-ஈரான் ஒப்பந்தத்தை ஒரு “முன்னேற்றம்” என்றும், “ஈரான் எந்தவொரு அணு ஆயுதத்தையும் பெறுவதைத் தடுப்பதற்கான ஒரு வரலாற்று வாய்ப்பு” என்றும் ஜி7 மாநாட்டில் பங்கேற்ற தலைவர்கள், பாராட்டினர்.
“ஜனாதிபதி ட்ரம்பின் வலுவான தலைமையின் கீழ், மத்தியஸ்த நாடுகளின் ஆதரவுடன் அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே எட்டப்பட்ட ஒப்பந்த அறிவிப்பை நாங்கள் வரவேற்கிறோம்,” என்று ஜி7 தலைவர்கள் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
லெபனானில் உடனடியாகப் போர் நிறுத்தம் அமல்படுத்தப்பட வேண்டும் என்றும், ஈரான் ஆதரவு ஹிஸ்புல்லா குழு நிராயுதபாணியாக்கப்பட வேண்டும் என்றும் தலைவர்கள் வேண்டுகோள் விடுத்தனர்.

