Saturday, October 24, 2026 5:00 pm
திடீர் உடல்நலக்குறைவு காரணமாக ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டதாக சமூக ஊடகங்களில் பரவும் செய்திகளை ஜனாதிபதி அலுவலகம் மறுத்துள்ளது.
ஜனாதிபதி அலுவலகம் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையில், இச்செய்திகள் பொய்யானவை என்று தெளிவுபடுத்தப்பட்டுள்ளதுடன், இத்தகைய வதந்திகளை நம்பி மக்கள் ஏமாற வேண்டாம் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும், அதிகாரப்பூர்வ ஆதாரங்கள் மூலம் உறுதிப்படுத்தப்படாத தகவல்களை, உண்மைத்தன்மையை சரிபார்க்காமல் சமூக ஊடகங்களில் பகிர்வதைத் தவிர்க்குமாறும் ஜனாதிபதி அலுவலகம் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

