Monday, November 9, 2026 2:35 pm
25 மாவட்டங்களிலும் உள்ள பல பகுதிகளில் கடுமையான மின்னலுக்காக அம்பர் நிலை எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம், இன்று திங்கட்கிழமை (9) விடுத்துள்ளது.
வெள்ளப்பெருக்கு, குறைந்த பார்வைத் திறன், போக்குவரத்து இடையூறுகள் மற்றும் அத்தியாவசிய சேவைகளுக்கு சேதம் ஏற்பட வாய்ப்புள்ளது என அத்துறை எச்சரித்துள்ளது.
வெள்ளம், நிலச்சரிவு ஆகிய எச்சரிக்கைகளைப் பின்பற்றுமாறும், தேவைப்பட்டால் பாதிக்கப்படக்கூடிய பகுதிகளை விட்டு வெளியேறத் தயாராவது உள்ளிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறும் அதிகாரப்பூர்வ வானிலை நிலையம் , பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

