Wednesday, October 21, 2026 3:24 pm
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் சிறப்புத் தூதர் ஸ்டீவ் விட்காஃபுடன், பல்வேறு போர்நிறுத்த வடிவங்களுக்கான முன்மொழிவுகள் குறித்து நோர்வேயின் ஓஸ்லோவில் உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் ஜெலென்ஸ்கி, செவ்வாய்க்கிழமை விவாதித்தார் என உக்ரைனின் அரசு நடத்தும் உக்ரின்ஃபார்ம் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.இந்தக் கூட்டத்தில் நார்வே பிரதமர் ஜோனாஸ் கார் ஸ்டோ, பின்லாந்து ஜனாதிபதி அலெக்சாண்டர் ஸ்டப் ஆகியோரும் கலந்துகொண்டனர்.
கூட்டத்திற்குப் பிறகு பேசிய ஜெலென்ஸ்கி, உக்ரைனுக்கான பாதுகாப்பு உத்தரவாதங்கள் ,நாட்டின் மீட்சி ஆகியவை தொடர்பாகவும் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றதாகக் கூறினார்.
சந்திப்பைத் தொடர்ந்து, விட்காஃப் ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கிற்குப் பயணம் செய்ய உள்ளார். அங்கு அவர் ரஷ்யத் தலைவர்களைச் சந்தித்து அமைதி முயற்சிகள் குறித்து விவாதிப்பார் என இன்டர்ஃபாக்ஸ்-உக்ரைன் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

