Saturday, November 14, 2026 3:24 pm
ஏழு மாவட்டங்களில் உள்ள பல்வேறு பகுதிகளுக்கு நிலச்சரிவு எச்சரிக்கையை தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் விடுத்துள்ளது. இந்த எச்சரிக்கை இன்று சனிக்கிழமை (14) மாலை 4.00 மணி வரை நடைமுறையில் இருக்கும்.
பதுளை மாவட்டத்தில் உள்ள ஆறு பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு ‘நிலை 2’ (Level 2 – Amber) எச்சரிக்கையும்; பதுளை, கொழும்பு, களுத்துறை, கண்டி, கேகாலை, நுவரெலியா ,இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களின் சில குறிப்பிட்ட பகுதிகளுக்கு ‘நிலை 1’ (Level 1 – Yellow) எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்படக்கூடிய பகுதிகளில் வசிக்கும் மக்கள் மிகுந்த விழிப்புணர்வுடன் இருக்குமாறும், பாதுகாப்பு அறிவுறுத்தல்களைப் பின்பற்றுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

