Tuesday, May 19, 2026 4:24 pm
இந்திய விமானப்படைத் தளபதி அமர் பிரீத் சிங், மூன்று நாள் உத்தியோகப்பூர்வ பயணமாக நேற்று இரவு (18) கட்டுநாயக்கவில் உள்ள பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தடைந்தார். அவர் மே 21 வரை தங்கியிருப்பார்.
இந்தப் பயணத்தின்போது, அவர் இலங்கை பாதுகாப்பு அதிகாரிகளைச் சந்தித்து, பத்தரமுல்லாவில் உள்ள IPKF நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார்.
அவர் கண்டியில் உள்ள தலதா மாளிகைக்குச் சென்று, இலங்கை இராணுவம் ,கடற்படைத் தளபதிகளுடன் சந்திப்புகளை நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.

