Saturday, November 28, 2026 10:16 pm
புது தில்லியில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை, இந்தியப் பெருங்கடல் விளிம்பு சங்கத்தின் (IORA) உறுப்பு நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் , தூதுக்குழுத் தலைவர்களுடன் சந்தித்தார் அமைச்சர் விஜித ஹேரத்.
ஐஓஆர்ஏ அமைச்சர்கள் குழுவின் 25வது கூட்டத்தின் இடையே இந்த சந்திப்பு நடைபெற்றது என்று ஹெரத் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். இந்தியப் பிரதமருடன் கலந்துரையாடுவதற்காக, இந்த சந்திப்பு ஐஓஆர்ஏ உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகளை ஒன்றிணைத்தது.

