Saturday, November 28, 2026 10:23 pm
ஆப்கானிஸ்தானின் கிழக்கு மாகாணமான குனாரில் உள்ள ஒரு பாஅடசாலையில் சனிக்கிழமை நிகழ்ந்த வெடிவிபத்தில் ஏழு மாணவர்கள் உயிரிழந்ததாகவும், 90க்கும் மேற்பட்ட மாணவர்கள் காயமடைந்ததாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வெடிவிபத்து அருகிலுள்ள வெடிபொருட்கள் கிடங்கில் இருந்து ஏற்பட்டிருக்கலாம் என்றும் அவர் கூறினார்.
மாகாணத் தலைநகரான அசாதாபாத்தின் புறநகர்ப் பகுதியில் உள்ள பள்ளியில் ஏற்பட்ட வெடிவிபத்து, சுரங்க நிறுவனங்களுக்குச் சொந்தமான வெடிபொருட்கள் சேமித்து வைக்கப்பட்டிருந்த கிடங்கில் ஏற்பட்ட அலட்சியத்தின் காரணமாக நிகழ்ந்ததாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
காயமடைந்தவர்களில் 15 பேர் வரை மருத்துவமனையில் தங்கியுள்ளனர், மீதமுள்ளவர்கள் சிகிச்சைக்குப் பிறகு விடுவிக்கப்பட்டனர்.

