Monday, May 18, 2026 9:19 pm
கியூபாவுக்கு எதிரான எந்தவொரு அமெரிக்க இராணுவ நடவடிக்கையும், பிராந்திய அமைதி மற்றும் ஸ்திரத்தன்மைக்கு கணக்கிட முடியாத விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய ஒரு “இரத்தக் களரிக்கு” வழிவகுக்கும் என்று ஜனாதிபதி மிகுவல் தியாஸ்-கானெல்எ எச்சரித்துள்ளார்.
300-க்கும் மேற்பட்ட ராணுவ ட்ரோன்களை கியூபா வாங்கியுள்ளதாகவும், அவற்றை குவாண்டநாமோ விரிகுடாவில் உள்ள அமெரிக்க கடற்படைத் தளம், அமெரிக்க ராணுவக் கப்பல்கள்,புளோரிடாவின் கீ வெஸ்ட் ஆகியவற்றைத் தாக்குவதற்குப் பயன்படுத்தும் திட்டங்கள் குறித்து விவாதித்ததாகவும் இரகசிய உளவுத் தகவல்களை மேற்கோள் காட்டி, ஞாயிற்றுக்கிழமை வெளியான ஆக்சியோஸ் அறிக்கையைத் தொடர்ந்து எக்ஸ் தளத்தில் கியூபா ஜனாதிபதி பதிவிட்டுள்ளார்.

