Saturday, October 24, 2026 5:16 pm
புலி, சிங்கம், யானை, கரடி, நரி என பல விலங்குகள் இருக்கின்றன. அதேநேரம் மனிதனால் இன்னமும் கண்டுபிடிக்கப்படாத பல விலங்குகளும் பூமியில் உலவுகின்றன. குறிப்பாக கடலுக்கு அடியில் ஆழத்தில் உலவும் பல உயிரினங்களுக்கு இன்னும் பெயரே வைக்கப்படவில்லை.
அமெரிக்கா – மெக்சிகோ எல்லைப் பகுதியில் உள்ள ஜூவாரஸ் பள்ளத்தாக்கில் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ள மர்ம உயிரினத்தின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. கோழிகள், சேவல்கள், முயல்கள் உள்ளிட்டவற்றை வேட்டையாடி செல்லும் இந்த உயிரினம் இதுவரை பூமியில் கண்டறியப்படாத ஒன்று என UFO ஆய்வாளர் ஜெய்மி மவுசான் தெரிவித்திருக்கிறார்.

