Thursday, October 22, 2026 4:40 pm
கெட்டம்பே ராஜோபவனாராமய விகாரையின் முன்னாள் பீடாதிபதியான அதி வணக்கத்துக்குரிய கெப்பிட்டியாகொட சிறிவிமல தேரர் காலமானதையடுத்து, அதன் புதிய அதிபதியாக அதி வணக்கத்துக்குரிய அக்குரஸ்சே சிறி தம்மவிமல தேரர் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஸ்ரீலங்கா ராமன்ன மகா நிகாயாவின் அனுநாயக்கராகவும் கடமையாற்றிய காலஞ்சென்ற தேரர், கண்டி தனியார் வைத்தியசாலையொன்றில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், ஒக்டோபர் 18ஆம் திகதி தனது 96ஆவது வயதில் காலமானார்.
அவரது தகனம் அக்டோபர் 21 திகதி கெட்டம்பே மைதானத்தில் அரச மரியாதையுடன் நடைபெற்றது.

