Tuesday, October 27, 2026 9:47 pm
இலங்கையில் நிலவும் மோசமான வானிலை காரணமாக மொத்தம் 3,966 குடும்பங்களைச் சேர்ந்த 14,485 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக இன்று செவ்வாய்க்கிழமை (27) நடைபெற்ற வாராந்திர அமைச்சரவை ஊடக சந்திப்பில் பேசிய அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் டாக்டர் நலிந்த ஜயதிஸ்ஸ, தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
மோசமான வானிலை காரணமாக ஒருவர் உயிரிழந்துள்ளார். மூவர் காயமடைந்தனர். பலத்த மழை மற்றும், காற்றினால் இரண்டு வீடுகள் முழுமையாகவும், மேலும் 312 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன.
181 குடும்பங்களைச் சேர்ந்த 554 பேர், பல்வேறு மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ள 13 தற்காலிக நிவாரண மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிவாரண மையங்கள் இரத்தினபுரி, கொழும்பு, மன்னார் , நுவரெலியா ஆகிய மாவட்டங்களில் அமைந்துள்ளன. பாதிக்கப்பட்டவர்களுக்கும், இந்த மையங்களில் தங்கியிருப்பவர்களுக்கும் தேவையான அனைத்து வசதிகளும் வழங்கப்பட்டு வருகின்றன.
இரத்தினபுரி, கேகாலை, கண்டி , கொழும்பு ஆகிய மாவட்டங்களில் பேரிடர் மீட்புப் பணிகளுக்கு உதவ இலங்கை இராணுவம், இலங்கை கடற்படை , பொலிஸார் ஆகியோர் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
‘அர்னாப்’ (Arnab) சூறாவளி, நாளை (28) காலை 11.30 மணியளவில் இந்திய நிலப்பகுதியை நோக்கி நகரும் என்று எதிர்பார்க்கப்படு கிறது.
தற்போதைய வானிலை சூழலால் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான உதவிகளை அதிகாரிகள் தொடர்ந்து வழங்கி வருகின்றனர். எனத் தெரிவித்தார்.

