Thursday, October 22, 2026 4:57 pm
கடந்த இரண்டு ஆண்டுகளில் நடத்தப்பட்ட 588,180 போதைப்பொருள் சோதனைகளில் 586,824 நபர்கள் கைது செய்யப்பட்டதாகவும், போதைப்பொருள் தொடர்பான குற்றங்கள் மீதான விசாரணைகளை அரசாங்கம் தீவிரப்படுத்தியுள்ளது என்றும் பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
கைது செய்யப்பட்டவர்களில் 11,970 பேர் 21 வயதுக்குட்பட்டவர்கள்.அவர்களில் 11,737 சிறுவர்களும், 233 சிறுமிகளும் அடங்குவர். இவர்களில், 18 முதல் 21 வயதுக்குட்பட்ட 10,673 சிறுவர்களும் 216 சிறுமிகளும் அடங்குவர். 18 வயதுக்குட்பட்ட 1,064 சிறுவர்களும் 14 சிறுமிகளும் கைது செய்யப்பட்டுள்ளனர். சட்டவிரோத வழிகளில் பெறப்பட்டதாகக் கூறப்படும் ரூ. 10,04 கோடி மதிப்புள்ள சொத்துக்களை, கடந்த இரண்டு ஆண்டுகளில் அரசாங்கம் முடக்கியுள்ளது என்றாஎ.

