Saturday, May 16, 2026 8:51 pm
தமிழக அமைச்சர்களாக மே 10ம் திகதி பதவியேற்ற அமைச்சர்களுக்கான இலாக்காக்கள் குறித்த விபரங்கள் இன்று ஆளுநர் மாளிகை சார்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
1 முதல்வர் ஜோசப் விஜய் – பொது நிர்வாகம், காவல், வனத்துறை, மாவட்ட வருவாய், உள்துறை, சிறப்பு திட்ட செயலாக்கள், மகளிர், இளைஞர், மாற்றுதிறனாளிகள், நகராட்சி நிர்வாகம், குடிநீர் விநியோக துறை, நகர்ப்புற வளர்ச்சி (முதல்வர் விஜய் வசம் மொத்தம் 16 துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன)
- ஆனந்த் – கிராமப்புற வளர்ச்சி, பஞ்சாயத்து மற்றும் பஞ்சாயத்து யூனியன், வறுமை ஒழிப்பு திட்டம், நீர்பாசனத்துறை, நீர்பாசன திட்டங்கள்
- ஆதவ் அர்ஜூனா – பொதுப்பணித்துறை (கட்டுமானம், நெடுஞ்சாலை, சிறு துறைமுகங்கள்), விளையாட்டுத்துறை
- அருண்ராஜ் – சுகாதாரம், மருத்துவ கல்வி மற்றும் குடும்ப நலத்துறை
- செங்கோட்டையன் – நிதித்துறை, ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதிய படிகளுக்கான துறை
- வெங்கட்ராமன் – உணவு, பொது விநியோகம், வாடிக்கையாளர் பாதுகாப்பு மற்றும் விலை கட்டுப்பாட்டுத்துறை
- நிர்மல்குமார் – மின்சாரம், சட்டம், கோர்ட், சிறை, லஞ்ச ஒழிப்புத்துறை, சட்டசபை, கவர்னர், தேர்தல்கள் மற்றும் பாஸ்போர்ட்
- ராஜ்மோகன் – பள்ளி கல்வி, தொல்லியல் துறை, தமிழ் வளர்ச்சித்துறை, தமிழ் கலாச்சாரம், தகவல் மற்றும் விளம்பரத்துறை, சினிமா தொழில்நுட்பம், செய்தித்தாள் அச்சு, அரசு விளம்பர, அச்சுத்துறை
- டி.கே.பிரபு – கனிமவளம் மற்றும் சுரங்கத்துறை
- கீர்த்தனா – தொழில்துறை, முதலீட்டு வளர்ச்சி விரைவில் அமைச்சரவை விரிவாக்கம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

