Sunday, July 26, 2026 6:59 pm
863 ஆண்டுகளுக்குப் பின்னர் நியூஸிலாந்தின் டுனெடின் நகரில் நடைபெறும் முழு சூரிய கிரனத்தைப் பார்க்க விரும்புபவர்கள் அங்குள்ள ஹோட்டல்கள் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே முன்பதிவு செய்கின்றனர்.
2028 ஆம் ஆண்டு ஜூலை 22 ஆம் திகதி, மாலை 4.17 மணிக்கு, சந்திரன் சூரியனுக்கு முன்னால் கடந்து செல்லும் போது, தெற்கு நியூசிலாந்தின் சில பகுதிகளில் சுமார் 100 கி.மீ அகலமுள்ள ஒரு நிழல் பட்டை உருவாகும். அந்தப் பட்டைக்குள் இருக்கும் மேற்குப் பகுதியில் உள்ள சுற்றுலாத் தலமான குயின்ஸ்டவுன் முதல் கிழக்குப் பகுதியில் உள்ள டுனெடின் நகரம் வரையிலான அனைத்து இடங்களும், 2 நிமிடங்கள் 51 வினாடிகளுக்குப் பகல் நேர இருளில் மூழ்கும்.
இன்னும் இரண்டு ஆண்டுகள் மீதமிருந்தபோதிலும், ஹோட்டல்கள் முன்பதிவு விசாரணைகளை ஏற்கெனவே ஏற்கத் தொடங்கிவிட்டன. இலவச கிரகணக் கண்ணாடிகளை உள்ளடக்கிய தனது “சூரிய கிரகணத் தொகுப்புக்காக”, டுனெடின் லீஷர் லாட்ஜ் உட்பட அந்த ஹோட்டலில் வியாழக்கிழமைக்குள் அனைத்து இடங்களும் முன்பதிவு செய்யப்பட்டுவிட்டன.

