Saturday, October 24, 2026 5:06 pm
பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA), இரு வெளிநாட்டினரிடமிருந்து சுமார் 5.85 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள 39,000 வெளிநாட்டு சிகரெட்டுகளை இலங்கை சுங்கத் திணைக்களம் பறிமுதல் செய்துள்ளது.
ஒக்டோபர் 22, ஆம்திகதி விமான நிலையத்தின் வருகை முனையத்தில் உள்ள ‘கிரீன் சேனல்’ (Green Channel) வழியாகச் சென்ற 38 , 41 வயதுடைய அந்த இரு நபர்களை, சுங்க அதிகாரிகள் மற்றும் சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவினர் தடுத்து நிறுத்தினர்.வணிக நிறுவன ஊழியர்களாகக் கருதப்படும் இவர்கள், AK 47 என்ற விமானம் மூலம் இரவு சுமார் 10:01 மணிக்கு வந்தடைந்தனர்.
அவர்களது இரண்டு பயணப் பைகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 195 அட்டைப்பெட்டிகள் (cartons) நிறைய வெளிநாட்டு சிகரெட்டுகளை சுங்க அதிகாரிகள் கண்டெடுத்தனர்.
சுங்க நடைமுறைகளைத் தொடர்ந்து, கைப்பற்றப்பட்ட அனைத்து சிகரெட்டுகளையும் அரசுடைமையாக்க உத்தரவிடப்பட்டது.

